

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விராலூர் கண்மாய் கரையில் நேற்று 10 மயில்கள் இறந்து கிடந்தன. தகவலறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். நெல் வயலில் எலிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட விஷ மருந்தை தின்றதால் மயில்கள் இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.