

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மன்மதராஜ் (35). இவர், குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது.
இவர் வேலை பார்க்கும் பள்ளியில் கடந்த 2017-ம் ஆண்டு படித்த மாணவி,தற்போது நர்ஸிங் முடித்துள்ளார். குற்றாலம் பூங்காவுக்கு வந்த அந்த பெண்ணைஎதேச்சையாக மன்மதராஜ் சந்தித்துள்ளார். அப்போது, பேசிக் கொண்டிருந்தமன்மதராஜ், அப்பெண்ணுக்கு பாலியல்தொல்லை அளித்துள்ளார். புகாரின்பேரில் குற்றாலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மன்மதராஜை கைது செய்தனர்.