சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்

சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தும் மத்திய அரசை கண்டித்தும் வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணியினர். அடுத்த படங்கள்: திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணியினர். திருவண்ணாமலையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணியினர். கடைசிப் படம்: ராணிப்பேட்டையில் மகளிரணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசும் திமுக மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.காந்தி.

Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தும் மத்திய அரசைக் கண்டித்தும் திமுக மகளிரணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத் தில் சமையல் எரிவாயு மீது ரூ.100 விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து, திமுக மகளிரணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மகளிரணி தலைவி வாசுகி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி நந்தகுமார், வேலூர் நாடாளுமன்ற உறுப் பினர் கதிர்ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

ராணிப்பேட்டை

திருப்பத்தூர்

இதில், சமையல் எரிவாயு விலையை கடந்த ஒரு மாதத்தில் 100 ரூபாய்க்கு மேல் உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசைக் கண்டித்தும் திமுகவினர் முழுக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்), முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைசெயலாளர் ஜோதி ராஜன், வாணி யம்பாடி நகரச் செயலாளர் சாரதி குமார், ஒன்றியச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், சூரியகுமார், சத்தியமூர்த்தி, ஒன்றிய பொறுப்பா ளர் அன்பழகன் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இறுதி யில், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சிந்துஜாஜெகன் நன்றி கூறினார்.

திருவண்ணாமலை

மாவட்ட மகளிரணி அமைப் பாளர் (தெற்கு) விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் (வடக்கு) லலிதா, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் நித்யா, லட்சுமி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், “சமையல் எரிவாயு விலையை உயர்த்திய பாஜக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு விலையை திரும்ப பெற வலியுறுத்தியும்” முழக்கமிட்டனர்.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் தரன், எம்எல்ஏ கிரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in