Regional02
வானூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
வானூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி நேற்று குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
வானூரை அடுத்த தொள்ள மூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் மகள் நந்தினி (15). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். நந்தினியும், அவரது சகோதரி நித்யயும் நேற்று குளத்தில் துணி துவைக்கச் சென்றுள்ளனர்.
அப்போது நந்தினி குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில்மூழ்கியுள்ளார். அருகிலிருந்தவர் கள் அவரது உடலை மீட்டு புதுச் சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே நந்தினி உயிரிழந்ததாக தெரிவித் துள்ளனர். இதுகுறித்து வானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
