

வாகனப் பரிசோதனைக் கருவியை குறிப்பிட்ட நிறுவனங்களில் மட் டுமே வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கவில்லை எனில் நீதிமன்றம் செல்வோம் என தமிழ்நாடு வாகனப் புகை பரிசோதனை மையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்சங்கத்தின் மதுரை கிளைத் தலைவர் ஆர்.ராமகிருஷ்ணன், செயலாளர் எஸ்.ராஜசேகர், பொரு ளாளர் எஸ்.நந்தகோபால் ஆகி யோர் மதுரையில் செய்தியாளர்க ளிடம் நேற்று கூறியது: வாகனப் புகை பரிசோதனை செய்வதற்கான இயந்திரங்கள் விற்பனைக்கு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் தமிழக போக்குவரத்துத் துறை ஆணையரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி பரிசோதிக்கப்பட்ட இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் 26 உள்ளன. அவற் றில் 3-க்கு மட்டும் ஆதரவாக தமிழகத்தில் விற்பனைக்கு அனு மதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.2.25 லட்சம் விற்க ப்பட்ட இந்த இயந்திரங்கள் ரூ.4.50 லட்சமாக விலை உயர்ந்துள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலை யங்கள், இரு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகன விற்பனை முகவர்கள் என 3 ஆயிரம் இடங் களில் புகை பரிசோதனை மையங் கள் அமைக் கப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இயந்திர விலை உயர்வால் பல கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இது குறித்து தரமான இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் போக்குவரத்து ஆணையரிடம் மனு அளிக்க முயன்றன. எனினும் இதை வாங்க ஆணையர் மறுத்துள்ளார். குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக பிறப்பிக்கப்பட்ட உத்த ரவை ரத்து செய்ய வேண்டும்.
எங்கள் கோரிக்கையை வலி யுறுத்தி வேலைநிறுத்தம் செய் வது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என அடுத்தகட்ட முயற்சியில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.