

அறிவியல் மாநாட்டில் விஞ்ஞான பாரதி என்ற அமைப்பை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த் தனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. அனுப்பியுள்ள கடிதம்:
டிச.22 முதல் 25-ம் தேதி வரை இந்திய-சர்வதேச அறிவியல் மாநாடு, காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியைவிஞ்ஞான பாரதி என்ற அரசு அல்லாத நிறுவனமும் இணைந்து நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பாரதி அமைப்பு, அறிவியல் முனைப்புடன் இன்றி, மதம் சார்ந்த அறி வியல் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. எனவே, விஞ்ஞான பாரதி என்ற அமைப்பை அறிவியல் நிகழ்வுகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.