

மதுரை மாநகர் மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் ராஜரத்தினம் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் டிச.25-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மத்திய அரசின் திட்டங்களை இடைத்தரகர்கள் இன்றி மக்களுக்கு கிடைக்கச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மதுரை மாநகர் மாவட்டப் பார்வையாளர் கதலி நரசிங்கப்பெருமாள், மாநகர் மாவட்டத்தலைவர் கே.கே.சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற் றனர்.