

சேலம் மாநகரத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 8 நான்கு சக்கர வாகனங்கள், 44 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 52 வாகனங்கள் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.
முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தை 0427 2431200 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சேலம் மாநகர காவல் துணை ஆணையர் செந்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.