

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை தெற்குமாசி வீதியில் தீபாவளிக்கு முதல் நாள் இரவில் ஜவுளி கடை செயல்பட்டு வந்த பழைய கட்டிடத்தில் தீப்பிடித்தது. இதில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு வீரர் கள் உயிரிழந்தனர். இதை யடுத்து இப்பகுதியில் உள்ள கடைகளில் நடைபெற்ற சோதனையில் 112 கடைகள் அபாயகரமான நிலையில் இருப்பது தெரியவந்தது. இந்த கட்டிடங்களுக்கு தீயணைப்புத் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இந்த 112 கட்டிடங்களும் ஏற்கெனவே தீயணைப்புத் துறை யால் தடையில்லாச் சான்று வழங்கப்பட்ட கட்டிடங்கள். கட்டிடங்களை ஆய்வு செய் யாமல் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜவுளிக் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், திரை யரங்கு, திருமண மண்டபங்கள் போன்றவற்றில் தீயணைப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட் டுள்ளதா என்பதை ஆய்வு செய் யவும், வரும் காலங்களில் கட்டி டங்களை நேரில் ஆய்வு செய்த பிறகே தீயணைப்புத்துறை தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் ஆகி யோர் வாதிட்டனர்.
பின்னர் மனு தொடர்பாக தமிழக தீயணைப்புத் துறை இயக்குநர் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசார ணையை 4 வாரங்களுக்கு நீதி பதிகள் ஒத்திவைத்தனர்.