சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளத்தின் தற்காலிக சுற்றுச்சுவர் மீண்டும் உள்வாங்கியது

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளத்தில்  சவுக்கு கட்டைகளுடன் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்த தற்காலிக சுவர் உள்வாங்கியுள்ளது.
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளத்தில் சவுக்கு கட்டைகளுடன் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்த தற்காலிக சுவர் உள்வாங்கியுள்ளது.
Updated on
1 min read

சிதம்பரம் பகுதிகளில் அண்மை யில் பெய்த தொடர் கனமழையால் சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் எதிரில் உள்ள தெப்பக் குளத்தின் இரண்டு பக்கத்தின் சுற்றுச்சுவர் உள்வாங்கி குளத்துக் குள் விழந்தது. அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளும் உள்வாங்கும் அபாயம் ஏற்பட்டது.

நகராட்சி நிர்வாகம், மேலும் மண்ணரிப்பு ஏற்படாதவாறு சவுக்கு கட்டைகளுடன் மண் மூட்டைகளை அடுக்கினர். தற்காலிகமாக சுவர் போன்று ஏற்படுத்தி பாதுகாப்புகளை செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி முதல்வர் பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட போது இந்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர் மழையால் நேற்று அதிகாலை மீண்டும் கோயில் சுற்றுச்சுவர், மண்மூட்டை அடுக்கிய பகுதியின் அருகாமையிலேயே உள்வாங்கியது. குளத்திற்கு அருகில் நியாய விலை கடை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் ஆகிய இரண்டு கட்டிடங்கள் உள்வாங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

"குளத்திற்கு வரும் வடிகாலை சரியான முறையில் நகராட்சி அதிகாரிகள் பராமரிக்கவில்லை.இதனால் மழை தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் போது, அது குளத்திற்குச் சென்று மண் அரிப்பு ஏற்பட்டு இது போல உள்வாங்கியுள்ளது" என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in