

மதுரை மாவட்ட குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் மறுவாழ்வு மற்றும் நலச்சங்க ஆண்டு பொதுக் குழு கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், 2025-ம் ஆண்டுக்குள் மதுரை மாவட்டத்தைக் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து உறுப்பினர்கள், வணிகர்கள் ஆகியோர் ஒத்துழைப்புத் தர வேண்டும். குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை pencil.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வீட்டுவேலை, வாடகை வாகன ஓட்டுநர்கள், தெரு வியாபாரிகள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்கள் விவரங்களை https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம் என தொழிலாளர் உதவி ஆணை யாளர்(அமலாக்கம்) சீ.மைவிழி ச்செல்வி தெரிவித்துள்ளார்.