‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பிரச்சாரம் கடலூர் மாவட்டத்தில் ஸ்டாலின் இன்று பங்கேற்பு காணொலி மூலம் சிறப்புரையாற்றுகிறார்

‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பிரச்சாரம்  கடலூர் மாவட்டத்தில் ஸ்டாலின் இன்று பங்கேற்பு காணொலி மூலம் சிறப்புரையாற்றுகிறார்
Updated on
1 min read

கடலூர் மாவட்ட திமுக சார்பில் `தமிழகம் மீட்போம்' தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (டிச.17) நடக்கிறது.

இதுகுறித்து கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கணேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

கடலூர் மாவட்டத்தில் இன்று (டிச.17) வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் `தமிழகம் மீட்போம்’ சட்டமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சிறப்புரையாற்றுகிறார்.

திருமண மண்டபம் மற்றும்வெளி அரங்கங்கள் என கிழக்கு மாவட்டத்தில் 102 இடங்களில், மேற்கு மாவட்டத்தில் 105இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற் குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி,கிளை செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என எம்ஆர்கே.பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in