

மதுரை அண்ணாநகர் காவல் ஆய் வாளர் பூமிநாதன் தலைமையில் உதவி ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்ட போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மாட்டுத்தாவணி பழச்சந்தை அருகில் பதுங்கியிருந்த 6 பேரை சுற்றி வளைத்துப் பிடித் தனர்.
விசாரணையில், ஆட்சியர் அலுவலகச் சாலை பிடி காலனி நாகமணி (26), சேதுமணி (18), மாடசாமி (22) கரும்பாலை சேர்வாரன் சின்னத்தம்பி (24), ஆறுமுகம் (23) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது.
இவர்கள் மாட்டுத்தாவணியில் இருந்து செல்வோரிடம் ஆயு தங்களைக் காட்டி மிரட்டி வழிப் பறியில் ஈடுபடத் திட்டமிட்டது தெரிந்தது.
6 பேரையும் கைது செய்த போலீஸார் 2 கத்திகள், கயிறு, மிளகாய்ப் பொடி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.