அரியலூரில் ரூ.26.52 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டங்களுக்கு முதல்வர் இன்று அடிக்கல்

அரியலூரில் ரூ.26.52 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டங்களுக்கு முதல்வர் இன்று அடிக்கல்
Updated on
1 min read

அரியலூருக்கு இன்று (டிச.17) வரும் தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.36.73 கோடியில் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்ற 39 பணிகளை திறந்துவைத்து, ரூ.26.52 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளது:

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (டிச.17) முற்பகல் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில், ரூ.36.73 கோடி மதிப்பிலான முடிவுற்ற 39 பணிகளை திறந்து வைத்தும், ரூ.26.52 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.129.34 கோடி மதிப்பில் 21,504 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். மேலும், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளார் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in