கரோனா தொற்று குறைந்துள்ளதால் பயணிகள் ரயிலை முழுமையாக இயக்க எம்பி கோரிக்கை

மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் வீ.ரா.லெனினிடம் கோரிக்கை மனு வழங்கிய சு.வெங்கடேசன் எம்.பி. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் வீ.ரா.லெனினிடம் கோரிக்கை மனு வழங்கிய சு.வெங்கடேசன் எம்.பி. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

கரோனா தொற்று குறைந்துள் ளதால் பயணிகள் ரயில்களை முழு மையாக இயக்க வேண்டும் என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளரிடம் வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ரயில்வே கோட்ட மேலாளர் வீ.ரா.லெனி னிடம் சு.வெங்கடேசன் எம்.பி. நேற்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கரோனா பரவல் குறைந் துள்ள நிலையில், தமிழக அரசு அனுமதி வழங்கியும் ரயில்வே நிர்வாகம் பயணிகள் ரயில் களை முழுமையாக இயக்க முன் வரவில்லை.

மதுரையில் இருந்து ராமேசுவரம், செங்கோட்டை, கோவைக்கு சாதாரண கட்டண பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை-புனலூர் வழித்தடத்தில் இயங்கும் சாதாரணக் கட்டண ரயில் விரைவு கட்டண ரயிலாக மாற்றப்பட்டதோடு, சாத்தூர், கோவில்பட்டியில் நிறுத்தங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதியில் இருந்து கேரளா செல்லும் தொழிலாளர், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.

மனுவைப் பெற்ற கோட்ட மேலாளர் லெனின் கூறுகையில், புனலூர் விரைவு ரயில் கோவில் பட்டியில் நிறுத்த ஏற்பாடு செய்யப் படும். மதுரை-போடி ரயில் பாதைப் பணிகள் 4 மாதங்களில் முடிவடைந்ததும் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in