முதல்வர் தொடங்கிவைத்த திட்டத்துக்கு திமுக எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்த போஸ்டரால் பரபரப்புமினி கிளினிக் திட்டத்துக்கு குல்லூர்சந்தை கிராமத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

Updated on
1 min read

தமிழகம் முழுவதும் மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் கே. பழனிசாமி நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 இடங்களில் மினி கிளினிக் தொடங்கப்பட உள்ளது. அதில், விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி, மூளிப்பட்டி, ஆவியூர், இலுப்பையூர், குல்லூர் சந்தை, செம்பட்டி ஆகிய இடங் களில் இம்மாதம் 20-ம் தேதி அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியால் மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. இந்நிலையில், அருப்புக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட குல்லூர்சந்தையில் "மினி கிளினிக் திட்டத்தை கடும் முயற்சி செய்து குல்லூர்சந்தை கிராமத்துக்குப் பெற்றுத்தந்த சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி" என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in