சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக சேலத்தில் பாஜக ஆலோசனை

சேலத்தில் நடைபெற்ற தமிழக பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசினார். உடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த நிர்வாகி இல.கணேசன் உள்ளிட்டோர். அடுத்த படம்: கூட்டத்தில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகளில் ஒரு பகுதியினர்.        படம்:எஸ்.குரு பிரசாத்

Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணி தொடர்பாக பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சேலத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். கூட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலத் தலைவர்கள் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் குழுக்களாகப் பிரிந்து, கட்சிப் பணி தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.

மேலும், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சார யுக்திகள் தொடர்பான ஆலோசனையும் நடந்தது.

கூட்டத்தில், தமிழக பாஜக பொறுப்பாளர் சிடிரவி, துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் இல.கணேசன், முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு, மேற்கு மாவட்டப் பார்வையாளர் கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in