ஓமனில் இருந்து தப்பி வந்த 6 மீனவர்கள் சிறையில் அடைப்பு

ஓமனில் இருந்து தப்பி வந்த 6 மீனவர்கள் சிறையில் அடைப்பு
Updated on
1 min read

ஓராண்டுக்கு மேல் வேலை செய்த மீனவர்களுக்கு, கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து, இந்திய தூதரகத்தில் மீனவர்கள் புகார் அளித்தனர். இதனால், மீனவர்கள் மேலும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். உணவு, அடிப்படை வசதியின்றி தவித்தனர்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் மீன்பிடி படகிலேயே கடந்த 4-ம் தேதி இந்தியாவுக்கு புறப்பட்டனர். அவர்கள் 2,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் கடல் பயணம் மேற்கொண்டு, 13-ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர்.

6 மீனவர்களும் விசைப்படகுடன் மாயமானது குறித்து, ஓமன் நாட்டில் படகின் உரிமையாளர் அப்துல்லா கமீஷ் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, முட்டத்துக்கு தப்பி வந்த மீனவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

உரிய ஆவணங்கள் இன்றி, அனுமதி பெறாமல் ஓமன் நாட்டு விசைப்பட கில் குமரி வந்ததற்காக, 6 மீனவர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, நேற்று இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in