5 பேர் தற்கொலை: திமுக முன்னாள் அமைச்சர் அஞ்சலி

5 பேர்  தற்கொலை: திமுக முன்னாள் அமைச்சர் அஞ்சலி
Updated on
1 min read

விழுப்புரம் அருகேயுள்ள வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபர் மோகன்,மனைவி, 3 குழந்தைகளுடன் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்தார். பிரேத பரிசோதனை முடிந்து கொண்டுவரப்பட்ட உடல்களுக்கு திமுக மாநில துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

ஓராண்டுக்கு முன்பு அருண் என்பவர் தன் மனைவி குழந்தைகளுடன் இறந்தார். திண்டிவனம் அருகே ஒரு மாதம் முன்பு ஐயப்பன் தன் மகளுடன் தற்கொலை செய்தார். இவைகளுக்கு காரணம் கடன் தொல்லைதான். இது மனஅழுத்தத்தை தருகிறது. கந்துவட்டி பிரச்சினையையும், ஆன் லைன் சூதாட்டத்தையும் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கடந்தாண்டே தெரிவித்தேன். முதல்வர் பழனிசாமி ஆட்சியில் கொலை, தற்கொலை என்பது தொடர்கதைகளாகியுள்ளது. இவைகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in