

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்கக் கட்டிடத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்றச் சங்க மாவட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மூர்த்தி, கிழக்கு வட்டக் கிளைச் செயலாளர் பரமசிவம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் கா.காமராஜ், மாநில துணைத் தலைவர்கள் பெரியசாமி, மணிராஜ், மாநில மகளிர் அணிச் செயலாளர் சு.ராணி ஆகியோர் பேசினர். மாநிலப் பொதுச் செயலாளர் வே.ஜெயபால் சிறப்புரையாற்றினார்.
மாவட்டத் தலைவராக ஆ.ராஜசேகரன், மாவட்டச் செயலாளராக பா.ஜெயபால், மாவட்டப் பொருளாளராக மு.வசந்தமுனியம்மாள், மாவட்ட மகளிர் அணி தலைவராக க.கார்த்திகா, மாவட்ட துனைத் தலைவராக வீ.இளங்கோ, மாவட்ட இணைச் செயலாளராக கண்ணன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக இ.முருகேஸ்வரி, மற்றும் கோட்டச் செயலாளர்களாக காந்த், ரா.செந்தில் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை(30 ஆண்டுகள் பணிபுரிந்தாலும்) எந்தவித பதவி உயர்வும் இன்றி ஓய்வு பெறு கின்றனர். அவர்களுக்கும் மற்றப் பணியாளர்களைப்போல் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தற்போது பணிபுரியும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களில் பலர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இத்துறையில் 5 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றுள்ளதால், அவர் களை கால்நடை ஆய்வாளர் பயிற்சிக்குத் தேர்வுசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.