

தூத்துக்குடி அருகேயுள்ள டி.சவேரியார்புரத்தைச் சேர்ந்த மரிய பாக்கிய சவரிமுத்து மகன் ஜோஸ்வா (22). சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்சிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று தனது நண்பர்களுடன் மாப்பிள்ளையூரணி குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற ஜோஸ்வா தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.
அவரை காப்பாற்ற நண்பர்கள் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி ஜோஸ்வாவின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.