மணிமுத்தாறு அணையிலிருந்து சுழற்சி முறையில் நீர் விநியோகிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் முதல் ரீச் பகுதி விவசாயிகள் வலியுறுத்தல்

மணிமுத்தாறு அணையிலிருந்து  சுழற்சி முறையில்  நீர் விநியோகிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்  என்று வலியுறுத்தி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள்.  (அடுத்த படம்) தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில்  மனு அளிக்க வந்தவர்கள். 									             படங்கள்: மு.லெட்சுமி அருண்
மணிமுத்தாறு அணையிலிருந்து சுழற்சி முறையில் நீர் விநியோகிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள். (அடுத்த படம்) தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் மனு அளிக்க வந்தவர்கள். படங்கள்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணிமுத்தாறு முதல் ரீச் பகுதி விவசாயிகள் அளித்த மனு விவரம்:

இவ்வாண்டு மழையின்றி முதல் ரீச் பகுதியில் குளங்கள் நிரம்பவில்லை. 2-வது ரீச் பகுதியில் பச்சையாறு தண்ணீர் வந்து, அந்த பகுதி குளங்கள் நிரம்பியுள்ளன. 3 மற்றும் 4-வது ரீச் பகுதிக்கு தற்போது தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது. 1-வது ரீச் பகுதிக்கு மணிமுத்தாறு அணை தண்ணீரைத் தவிர, வேறு நீர் ஆதாரம் கிடையாது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 105 அடிக்கு மேல் உள்ளதால் 4 பகுதிகளுக்கும் தண்ணீர் போதுமானதாக உள்ளது. எனவே, சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். குடி தண்ணீருக்காக 80 அடி வாய்க்கால் முதல் ரீச் பகுதிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு

தண்டுவடம் பாதித்தோர் மனு

பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சேர்ந்த பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி ஆர். இந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த மனுவில்,“ சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

திம்மராஜபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி எஸ்.மாரிமுத்து, ஊனமுற்றோர் உதவித் தொகை மற்றும் செயற்கை கால் உபகரணங்கள் கேட்டு மனு அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in