அம்பை அருகே இளைஞர் கொலை

அம்பை அருகே இளைஞர் கொலை
Updated on
1 min read

அம்பாசமுத்திரம் அருகே ரங்கசமுத்திரம் நத்தம் காலனி பகுதியில் முப்பிடாதியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவில் நடைபெற்ற விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த பா. இசக்கிராஜா (20), இ. ஆனந்தகுமார் (17), பெ. சங்கரநாராயணன் (25) ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அப்போது இவர்கள் மூவரும் மது போதையில் தகராறு செய்துள்ளனர். இதற்கு அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இசக்கிராஜா, ஊர் நாட்டாமை பாபநாசம் (65) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மா. ஜெய்கணேஷ் (25) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த இசக்கிராஜா, பாபநாசம் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இசக்கிராஜா நேற்று காலையில் உயிரிழந்தார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in