கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 56,208 பேர் காவலர் எழுத்துத்தேர்வு எழுதினர்

விழுப்புரத்தில் காவலர் எழுத்துத் தேர்வு நடைபெறும் மையத்தினை பார்வையிடும் டிஐஜி எழிலரசன்.
விழுப்புரத்தில் காவலர் எழுத்துத் தேர்வு நடைபெறும் மையத்தினை பார்வையிடும் டிஐஜி எழிலரசன்.
Updated on
1 min read

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 56,208 பேர் காவலர் எழுத்துத்தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் 18 மையங்களில் தேர்வுநடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு கடலூர்மாவட்டத்தில் 28, 624 பேர் விண்ணப்பித்திருந் தனர். 25,876 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். ஆனால் 2,748 பேர் தேர்வு எழுத வரவில்லை. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உபகர ணங்கள் அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு தேர்வு மையங்களை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், கடலூர் எஸ்பி அபிநவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி

இந்தத்தேர்வுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் 9,726 பேர் விண்ணப்பித்திருந்தனர். 1 திருநங்கைகள் உட்பட 8,664 பேர் நேற்று தேர்வு எழுதினர். 1,062 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மேற்பார்வையில், ஒரு கூடுதல் கண்காணிப்பாளர், 5 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 27 காவல் ஆய்வாளர் கள், 105 காவல்உதவி ஆய்வாளர்கள் மற்றும் சுமார் 800 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 24, 166 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 21,668 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in