

எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் பேசும்போது, காலம் என்பது நாம் உருவாக்கி கொள்வது. காலத்தே பயிர் செய்தால் பயன் அதிகம் கிடைக்கும். இன்றைய விஞ்ஞான உலகில் நாம் நிறைய மாற்றத்தை நமக்குள் ஏற்படுத்தி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தனித்திறனை மேம்படுத்த ஏற்ற காலம் மாணவப் பருவம்தான். மாணவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். தமிழ்த்துறை தலைவர் மு. செல்வகுமார் பாண்டி நன்றி கூறினார். துணை முதல்வர் எஸ். அசோக் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் என சுமார் 345 பேர் கலந்துகொண்டனர்.