

தமிழக அரசு உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு 9300-4200 இணையான ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது துறையில் புதிதாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இப்பணிச்சுமையைக் குறைக்க காலியாக உள்ள உதவித் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டாரத்துக்கு ஒரு துணை தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.