

மதுரை பொன்மேனி பகுதி யிலுள்ள காளிமுத்து நகரைச் சேர்ந்த சின்னராஜ் மகன் கார்த்திக் (22). இவர் நேற்று காலை வீட்டில் இருந்தபோது, பைக்கில் வந்த 4 பேர் கும்பல் அவரை ஆயுதங்களால் தாக்க முயன்றது. அவர் வீட்டின் மாடிக்கு ஓடினார். ஆனால் அக்கும்பல் துரத்திச் சென்று வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
எஸ். எஸ். காலனி போலீஸார் கார்த்திக் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் மீது கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தீவிர மாக விசாரணை நடத்தி வரு கின்றனர்.