

பாரம்பரியமான மலை ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, சிறப்பு ரயிலாக அறிவித்து ரூ.3 ஆயிரம் வீதம் கட்டணம் வசூல் செய்து சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து 141 பயணிகள், 20 ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் சிறப்பு மலை ரயில், பிற்பகல் 1.30 மணிக்கு உதகை ரயில் நிலையம் வந்தது. அப்போது மலை ரயிலை தனியார் வசம் ஒப்படைத்ததற்கு கண்டனம் தெரிவித்து எஸ்டிபிஐ அமைப்பினர் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து 17 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்பு மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.