மக்கள் அதிமுகவுக்கு வெற்றியை பரிசாக வழங்குவார்கள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை

ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
Updated on
1 min read

ஜெயலலிதா பேரவை, அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை சார்பில் திருமங்கலத்தில் அம்மா பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

முதல்வர் நடவடிக்கையால் இன்றைக்கு காவிரி டெல்டா பகுதிகளில் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள் அமைத்து நீர் மேலாண்மை புரட்சி செய்து இன்றைக்கு இந்திய அளவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் வரும் தேர்தலில் வெற்றியையும், திமுகவின் பொய் பிரச்சாரத்துக்கு தோல்வியையும் மக்கள் பரிசாக வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏஆர்.மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன், ப்ரீத்தி மருத்துவமனை இயக் குநர் சிவகுமார், அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி, இயக்குநர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in