திருச்சியில் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் டிஆர்டிஏ அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை

திருச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஒருங்கிணைந்த அலுவலக புதிய கட்டிடம் கட்ட நேற்று நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர்கள் என்.நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.
திருச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஒருங்கிணைந்த அலுவலக புதிய கட்டிடம் கட்ட நேற்று நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர்கள் என்.நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.
Updated on
1 min read

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஒருங்கிணைந்த அலுவலக புதிய கட்டிடம் கட்ட நேற்று பூமி பூஜை நடை பெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் பூமி பூஜை தொடங்கி வைத்தனர்.

இந்த புதிய கட்டிடத்தின் தரைத்தளத் தில் மகளிர் திட்ட அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம், உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகம் 14,246 சதுர அடியில் கட்டப்படுகிறது. முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகம், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அலுவலகம் 13,740 ச.அடியில் கட்டப்படவுள்ளது. இந்தப் பணி 18 மாதங்களில் முடித்து 2022 ஜூன் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in