

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இல்லாத பிரச்சினைகளை இருப் பதாகக் கூறி திமுக குழப்பம் விளைவிக்கிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறி யதாவது:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து மக்களிடம் திமுக தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து திமுக பொய் செய்திகளைப் பரப்பி வருகிறது.
2-ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதை நினைவில் வைத்து ஆ.ராசா பேச வேண்டும். அவர் ஜனவரி 31 வரை தான் இவ்வாறு பேச முடியும். திமுகவுக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மதுரை மாவட்ட பாஜக தலைவர் கே.கே.சீனி வாசன், துணைத் தலைவர் ஹரிகரன், முன்னாள் தலைவர் சசிராமன் ஆகியோர் உடன் இருந் தனர்.
முன்னதாக அவர் பரமக் குடியில் செய்தியாளர்களிடம் கூறியதவாவது:
திமுகவினர் யாரும் தண்டிக் கப்படவில்லை என ஆ.ராசா எம்.பி. கூறியுள்ளார். ஜனவரி 31-ம் தேதிக்குப் பிறகு திமுகவின் நிலை தெரிய வரும்.
போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நானே வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.