

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நேற்று இணைஆணையர் க.செல்லத்துரை முன்னிலையில் மீனாட்சியம்மன் கோயில் மற்றும் 11 உப கோயில்களின் உண்டியல் திறக்கப்பட்டது.
உண்டியல் திறப்பின்போது கூடலழகர் பெருமாள் கோயில்உதவி ஆணையர் மு.ராமசாமி, தக்கார்பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், இந்து சமய அறநிலையத் துறை தெற்கு,வடக்கு சரக ஆய்வர்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வங்கிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ரொக்கமாக ரூ.62 லட்சம், தங்கம் 550 கிராம், வெள்ளி 3 கிலோ 870 கிராம் மற்றும் அயல்நாட்டு பணம் 27 நோட்டுகளை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி இருந்தனர்.