

சேலம் மாநகராட்சி தனிகுடிநீர் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இன்றும் (10-ம் தேதி), நாளையும் (11-ம் தேதி) இத்திட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சியின் தனிகுடிநீர் திட்ட குடிநீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள குடிநீர் கசிவுகளை சரி செய்யும் பணி மற்றும் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. எனவே, இன்றும், நாளையும் இக்குடிநீர் திட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.