பின்னலாடை நிறுவனம் முன் அமர்ந்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

பின்னலாடை நிறுவனம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.
பின்னலாடை நிறுவனம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.
Updated on
1 min read

டெல்லியில் போராடும் விவசாயி களுக்கு ஆதரவாக திருப்பூர் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக, ஆதரவு கோரி பின்னலாடை உற்பத்தி நிறுவ னங்களில் பிரச்சாரமும் மேற் கொண்டனர்.

இந்நிலையில், மாநகரில் திறக்கப்பட்டிருந்த உற்பத்தி நிறுவ னங்களுக்கு தொழிற்சங் கத்தினர் நேற்று காலை சென்று ஆதரவுகோரினர்.

திருப்பூர் குமரானந்த புரம் பகுதியில் நேற்று செயல் பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனத்துக்கு சென்ற போது, நிறுவன நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

இதனால் இருதரப் பினரிடையே வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. மேற்கண்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனம் மீது தொழிலா ளர் நல விதிகளை அமல்படுத்தாத புகார் இருந்ததால், அதனை அமல்படுத்த வலியுறுத்தி நிறுவன நுழைவுவாயில் முன்பாக தொழிற்சங்கத்தினர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பின்னலாடை நிறுவன நிர்வாகிகள் கூறும்போது, "விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், பின்னலாடை நிறுவனத்தை மூட வற்புறுத்தினால் இங்குள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்றனர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, "பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தை மூடவற்புறுத்தவில்லை. ஆதரவளிக்க கோரிக்கை மட்டுமே விடுக்கப் பட்டது. விதிமீறல்கள் இருந்தது தெரியவந்ததால் போராட்டம் நடத்தப்பட்டது" என்றனர்.

வடக்கு காவல் நிலைய போலீஸார் நடத்திய பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in