ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்திய அரசின் அரசிதழில் நவ.19-ம் தேதி வெளியான அறிவிப்பில், அலோபதி மருத்துவர்கள் செய்து வரும் அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்திஇந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் வரும் 11-ம் தேதி அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா மற்றும் அவசர சிகிச்சையைத் தவிர மற்ற அனைத்து சிகிச்சைகளையும் தவிர்க்க அரசு மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மதுரை அரசு ராசாசி மருத்துவமனை டீன் அலுவலக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட அவைத் தலைவர் மருத்துவர் பாப்பையா தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மருத்துவ மாணவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
சிவகங்கை
மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே இந்திய மருத்துவக் கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதன் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துராமலிங்கம், ஜெகன், முத்துப்பாண்டி, சிவராஜ், பாலாம்மாள் சுந்தர்ராஜன், ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
திண்டுக்கல்
பழநி அரசு மருத்துவமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவர் சங்கப் பழநி கிளைத் தலைவர் குணசீலன் தலைமை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தேனி
