

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து, இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்தியாவில் நவீன மருத்துவம், ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவ முறைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், கடந்த நவம்பர் 19-ம் தேதி மத்திய அரசு அலோபதி மருத்துவ அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்கள் செய்யலாம் என அறிவித்திருந்தது.
இதை கண்டித்து, சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மருத்துவச் சங்க மாவட்ட செயலாளர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் பிராங்கிளின் கிருபா, முன்னாள் மாவட்ட தலைவர் பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
ஈரோடு
சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திர பிரபு கூறும்போது, வரும் 11-ம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனை, கிளினிக்குகள் மூடப்படும், என்றார்
கிருஷ்ணகிரி