கிருஷ்ணகிரி அருகே பைரவர் ஜெயந்தி விழா

கல்லுகுறிக்கி காலபைரவர் கோயிலில் நடந்த பைரவர் ஜெயந்தி விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அடுத்த  படம்: இதையொட்டி பெண்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.
கல்லுகுறிக்கி காலபைரவர் கோயிலில் நடந்த பைரவர் ஜெயந்தி விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அடுத்த படம்: இதையொட்டி பெண்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.
Updated on
1 min read

கல்லுகுறிக்கி காலபைரவர் கோயிலில் நேற்று பைரவர் ஜெயந்தி விழா நடந்தது.

கிருஷ்ணகிரி அருகே கல்லுகுறிக்கி பெரியஏரி பகுதியில் அமைந்துள்ள காலபைரவர் திருக்கோயிலில், நேற்று பைரவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், கணபதி ஹோமம், அஷ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் கால பைரவர் உற்ஸவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் பங்கேற்று பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதேபோன்று, கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோயிலில் பைரவர் ஜெயந்தி விழா நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in