

தமிழகத்தில் பட்டியல் சமூக பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர்,பண்ணாடி, காலாடி, தேவேந்திரகுலத்தார், வாதிரியார், கடையர் ஆகிய 7 சமூகங்களை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கக் கோரி வலியுறுத்தப்பட்டு வந்தநிலையில், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இதில் வேளாளர் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவ்விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் வேளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்றுசாலை மறியல் நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் தலைமை வகித்தார். இதுதொடர் பாக 55 பேரை திருப்பூர் தெற்கு போலீஸார் கைது செய்தனர்.