பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் அவிநாசிகைகாட்டிபுதூர் அவிநாசிலிங்கம் பாளையம் வீதியை சேர்ந்தவர் என்.மதியழகி (60). இவர், நேற்றுகாலை வீட்டின் முன் உள்ள மரத்தில் கடவுள் வழிபாட்டுக்காக பூக்களை பறித்துள்ளார். அந்த நேரத்தில் அவரை கடந்துஇருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், 100 அடி தூரத்தில் திடீரென வாகனத்தை நிறுத்தி யுள்ளனர். ஒருவர் வாகனத்தில் தயாராக காத்திருக்க, மற்றொருவர் மதியழகியின் பின்புறமாக சென்று 5 பவுன் தங்க சங்கிலியைஇழுத்ததில், நிலைதடு மாறி அவர் கீழே விழுந்துள்ளார். அதற்குள் 5 பவுன் சங்கிலியுடன் இருவரும் தப்பிவிட்டனர். லேசான காயங்களுடன் மதியழகி தப்பினார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து அவிநாசி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in