திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

புயலை வைத்து அரசியல் செய்கிறார் ஸ்டாலின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

Published on

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 643 பேருக்கு ரூ.1,05,53,291 மதிப்பில் நலத் திட்டங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

புயலை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார். இதே திமுக ஆட்சிக் காலத்தில் கன மழையால் உயிரிழந்தால் ரூ.2 லட்சம்தான் வழங்கப்பட்டது. அவர்கள் அதில் ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை. அதன் பின் அதிமுக ஆட்சியின்போது ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது அதை ரூ.10 லட்சமாக முதல்வர் உயர்த்திதந்துள்ளார்.

அது மட்டுமின்றி புயல் வருவ தற்கு முன்பாகவே புயலைக் காட்டிலும் வேகமாகச் செயல் பட்டு இரண்டரை லட்சம் மக் ளை முகாமில் தங்க வைத்து அவர்களது உயிரை முதல்வர் பாதுகாத்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையில் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. இயற் கையைக் கையாளுவதில் ஒரு புதிய இலக்கணத்தை முதல் வர் படைத்து வருகிறார். மக்க ளைப் பாதுகாக்கும் பணியில் தன் னையே அர்ப்பணித்து வரும் முதல்வருக்கு நாம் அனைவரும் தோளோடு தோளாக துணை நிற்க வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in