8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் மீண்டும் திறப்பு மதுரையில் உற்சாகமாக வகுப்புகளுக்கு வந்த மாணவ, மாணவியர்

முதல் நாளன்று தங்கள் நண்பர்களைச் சந்தித்து செல்பி எடுத்து மகிழ்ந்த மதுரை மீனாட்சி அரசு கல்லூரி மாணவிகள். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
முதல் நாளன்று தங்கள் நண்பர்களைச் சந்தித்து செல்பி எடுத்து மகிழ்ந்த மதுரை மீனாட்சி அரசு கல்லூரி மாணவிகள். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

ஏறக்குறைய எட்டு மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் திறக் கப்பட்டன. மாணவ, மாணவிகள் தங்கள் நண்பர்களைச் சந்தித்து மகிழ்ந்தனர்.

கரோனா ஊரடங்கையொட்டி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. பொது ஊரடங்கால் இவ்வாண்டு ஆன்லைன் மூலமே பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில் இளநிலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நேற்று (டிச.7) முதல் கல்லூரிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. மதுரையில் அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, தியாகராசர், அமெரிக்கன் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, மாணவ, மாண விகள், பேராசிரியர்கள் நேற்று கல்லூரிக்கு வந்தனர்.

சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு மாணவ, மாணவிகள், பேராசி ரியர்கள் சந்தித்து மகிழ்ந்தனர். ஒரு சில கல்லூரிகளில் மாணவர்கள் குறைவாக வந்திருந்தாலும், அனைத்துக் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், ஊழியர்கள் முழு வதுமாக வந்திருந்தனர்.

வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்னதாக சானிடைசர், முகக் கவசம் அணிதல், வகுப்பறை, கல்லூரி வளாகத்தில் சமூக விலகல் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதற்காக சிறப்பு ஊழியர்களை நியமித்து கண்காணித்தனர்.

காய்ச்சல், இருமல் உள் ளிட்ட அறிகுறிகள் தென்பட் டவர்களைக் கல்லூரிக்குள் அனு மதிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in