வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்தைபொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்தைபொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை பொது மக்கள் வழங்க வேண்டும் என தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.வி.ராஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு விரோதமானது. இந்த சட்டங்களை எதிர்த்து, புது டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

அவர்களது போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. அதனை முறியடிக்க விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை களை நிறைவேற்ற முன் வராமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு காலம் கடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில், 3 வேளாண்மை சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டத்துக்கு (8-ம் தேதி - இன்று) விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்துடன் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் செலுத்த மறுக்கும் போராட்டமும் நடைபெறும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. இந்த போராட் டம் என்பது பொது மக்களுக்கான போராட்டம். இதற்கு, பொதுமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in