

மதுரையில் அம்பேத்கர் நினைவு நாளில் முற்போக்கு உழவர் சங்கம் நேற்று தொடங்கப்பட்டது.
மேலூர் எட்டிமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் முற் போக்கு உழவர் சங்க ஒருங் கிணைப்பாளரும், மூத்த வழக் கறிஞருமான பொ.ரத்தினம் சங்கத்தைத் தொடங்கி வைத்து கொடியேற்றினார்.
இதில் செயற்குழு உறுப் பினர்கள் பெ.ஜெயசேகர், கு.ஜெயலெட்சுமி, வி.மெய்யப் பன், வி.கதிர்வேல், ப.சின்னப் புலியன், திரு அ.ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
பொ.ரத்தினம் கூறியதாவது முற்போக்கு உழவர் சங்கத்தின் சார்பில் ஊழல் எதிர்ப்பு, மதுவிலக்கை அமல் படுத்துதல், சாதியொழிப்பு போன்ற அடிப்படை அம் சங்களில் சமரசமின்றி செயல்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை உரு வாக்குவோம். உழவர்கள் பிரச் சினைகளுக்குத் தீர்வுகாண அனைத்து நட வடிக்கைகளையும் சங்கம் மேற் கொள்ளும் என்றார்.