

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாபு தலைமை வகித்தார்.
கூட்டத்தில், மாற்று விடுப்பு வழங்கப்படாத நாட்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். ஒப்பந்தத்தை மீறி நடக்கும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாக மாவட்ட அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டிச.10-ம் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.