

தூத்துக்குடி மில்லர்புரம் தூயமரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 30 உதவியாளர் பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 495 நபர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் 298 நபர்கள் தேர்வு எழுத வந்துள்ளனர். 197 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில 66 உதவியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வுஇன்று (டிச.6) நடைபெற உள்ளது.தேர்வுக்கான வினாத்தாள்கள் சென்னையில் தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் பதிவாளர் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட இணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட மத்திய வங்கி மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட அலுவலர்களின் கண்காணிப்பில் இத்தேர்வு நடைபெறுகிறது’’ என்றார்.
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைஇணைய கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர்மு.முருகன், மண்டல இணைப்பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ச.லி.சிவகாமி, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பெ.ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் மரியஜோசப் அந்தோணி மற்றும் துணை பதிவாளர்கள், கூட்டுறவு அலுவலர்கள் உடனிருந்தனர்.