ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு
Updated on
1 min read

வந்தவாசி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி உயிரி ழந்தார்.

சென்னை வடபழனி பகுதியில் வசிப்பவர் நீலமேகம். இவரது மகள் சினேகா(17). பிளஸ் 2 படித்து வந்தார். இவர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சின்ன சேத்துப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வந்தார்.

இந்நிலையில், தனது உறவினரது குழந்தைகளான மதி, நிகிதா, கிரீஷ் ஆகியோருடன் கீழ்குவளைவேடு ஏரியை பார்க்க சினேகா நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

அப்போது கரையில் நின்றி ருந்த சினேகா கால் தவறி ஏரியில் விழுந்துள்ளார். அவரை, காப்பாற்றும் முயற்சியில் அவருடன் சென்ற சிறுவர்கள் முயற்சித் துள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, சம்பவ இடத்துக்கு சென்ற கிராம மக்கள், ஏரியில் தத்தளித்த 4 பேரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஏற்கெனவே சினேகா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் இருந்த மதி மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். வந்தவாசி அரசு மருத்துவமனையில் நிகிதா, கிரீஷ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வந்தவாசி வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in