தேவிகாபுரத்தில் 2 ஏரிகள் நிரம்பின சீர் வரிசையுடன் வரவேற்ற கிராம மக்கள்

தேவிகாபுரம் அருகே ஏரி நிரம்பியதால் சீர் வரிசையுடன் சென்று வரவேற்ற கிராம மக்கள் மற்றும் விவசாயிகள்.
தேவிகாபுரம் அருகே ஏரி நிரம்பியதால் சீர் வரிசையுடன் சென்று வரவேற்ற கிராம மக்கள் மற்றும் விவசாயிகள்.
Updated on
1 min read

சேத்துப்பட்டு அருகே 2 ஏரிகள் நிரம்பியதை அடுத்து சீர் வரிசையுடன் சென்று கிராம மக்கள் வரவேற்றனர்.

வட கிழக்கு பருவமழை மற்றும் ‘நிவர்’, ‘புரெவி’ ஆகிய புயல் காரணமாக தி.மலை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட் டத்தில் உள்ள 224 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அதில், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள பெரிய ஏரி மற்றும் கைலாச ஏரிகளும் நிரம்பி கோடிபோனது. இதையடுத்து விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கனககிரீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் இணைந்து சீர் வரிசையுடன் மேள தாளம் முழுங்க ஊர்வலமாக சென்று ஏரி நீரை வரவேற்றனர்.

மேலும் அவர்கள், ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீரைமலர் தூவி வரவேற்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஏரிக ளும் நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in