

கோவை-நாகர்கோவில், சென்னை-குருவாயூர், சென்னை-ராமேசுவரம், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல்-பாலக்காடு, மதுரை-பிகானீர் ஆகிய ரயில்களை தினமும் சிறப்பு ரயில்களாக இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி கோவையில் இருந்து சிறப்பு ரயில் டிச.8 முதல் இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் டிச.9 முதல் இரவு 9.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு கோவை சென்றடையும்.
மதுரையில் இருந்து சிறப்பு ரயில் டிசம்பர் 10, 17, 24, 31 ஆகிய வியாழக்கிழமைகளில் முற்பகல் 11.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.50 மணிக்கு பிகானீர் சென்று சேரும். பிகானீரில் இருந்து வாராந்திர விரைவு சிறப்பு ரயில் டிச.6, 13, 20, 27, ஜனவரி 3 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.00 மணிக்குப் புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு மதுரை வந்து சேரும். அதேபோல், டிச.8 முதல் சென்னை - குருவாயூர், சென்னை - ராமேசுவரம், சென்னை சென்ட்ரல் - பாலக்காடு இடையே சிறப்பு ரயில் சேவை தொடங்கும். இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம். இத்தகவலை மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.