சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
Updated on
1 min read

முதல்வர் கே.பழனிசாமி கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக நேற்று சிவகங்கை வந்தார். அப்போது அவருக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் சிவகங்கை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் முதல்வருக்கு மாவட்ட எல்லையான மணலூரில் தொடங்கி பூவந்தி, திருமாஞ் சோலை, முத்துப்பட்டி, சிவகங்கை ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.பி. கருணாகரன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், துணைத் தலைவர் கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் இரா.போசு, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செய்தித் தொடர்பாளர் ரா.அருள்ராஜ் ஆகியோரும் வரவேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in