

மதுரையில் கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகரில் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், நகரில் கடந்த ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை 70 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கடச்சனேந்தலைச் சேர்ந்த பாண்டியராஜன் (24), கிருஷ்ணன்(47), ஆனையூர் டிஎன்எச்பி காலனி பாண்டி (24) ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து 73 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திலகர் திடல் உட்கோட்டத்தில் அதிகமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.